Home / ஆரோக்கியம் / சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்!

சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்!

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை:

வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.

வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும். இதனால் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.

உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

கரும்புள்ளிகளின் மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஒரு வாழைப்பழத்துடன் (பூவன் பழம்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.

இந்த வாழை – வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.

வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

தலைமுடி உதிர்வை தடுத்து, முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

முடி உதிர்தல் பிரச்சனை பெரும்பாலனோருக்கு இருக்கிறது. பெண்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்குவதில்லை. ஆனால் ஆண்கள் வாழ்க்கை முறை, மாத்திரைகள், ...

%d bloggers like this: