Home / ஆன்மீகம் / சரவணபவனும் பழமொழிகளும்

சரவணபவனும் பழமொழிகளும்

முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

சேனானீனாம் அஹம் ஸ்கந்த:

படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர்.

பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

முருகன் குறித்த பழமொழிகள்

 • வேலை வணங்குவதே வேலை.
 • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
 • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
 • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
 • அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
 • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
 • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
 • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
 • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
 • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
 • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
 • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
 • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
 • வேலனுக்கு ஆனை சாட்சி.
 • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
 • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
 • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
 • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

 

About இனியவன்

x

Check Also

எந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவஸ்தைப்படுவார்கள்

மேஷ ராசி : தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே ...

%d bloggers like this: