Home / உலகச் செய்திகள் / சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்-இம்ரான்

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்-இம்ரான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் ஒரு போதும் அணு ஆயுதப் போரை தொடங்காது என தெரிவித்தார். அதேசமயம், பீரங்கிகள், துப்பாக்கிகளைக் கொண்டு வழக்கமான முறையில் இந்தியாவுடன் போர் நடைபெறும் பட்சத்தில் பாகிஸ்தான் தோற்க நேரிடும் என அவர் கூறினார். எனவே, அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகள் மோதிக் கொள்வது, அணு ஆயுத போருக்குத் தான் வழிவகுக்கும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும் என்ற இரு வாய்ப்புகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், சாகும் வரை போரிட வேண்டும் என்ற வாய்ப்பையே பாகிஸ்தான் தேர்வு செய்யும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாடு, சாகும் வரை போரிட நேர்ந்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் தாம் போருக்கு எதிரானவன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: