Home / சினிமா செய்திகள் / சமூக வலைத்தளங்களில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் கதை இதுவாக என்று பரவும் செய்தி

சமூக வலைத்தளங்களில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் கதை இதுவாக என்று பரவும் செய்தி

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தான்  பேட்ட. இப்படத்தில் ரஜினி கல்லூரி வார்டனாக நடிக்கிறார் என்று செய்திகள் வந்ததாக பேசப்பட்டது.

பெங்கலுக்கு வெளியாக இருக்கும் ரஜினியின் பேட்ட திரைப்படம் ஆணவக் கொலை பற்றியதாக இருப்பதாக சில செய்திகள் மறைமுகமாக வந்துக்கொண்டிருக்கிறது.

இந்த வேலையில் சண்டைகாட்சிகளில் நடிப்பது போன்ற போட்டோக்கள் வெளியானதை அடுத்து சில நேரங்களில்  பாட்ஷா போன்ற கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் நினைத்தனர்.

இந்நிலையில் பேட்ட திரைப்படம் ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. கல்லூரி விடுதி வார்டன் ஆணவக் கொலையை எதிர்க்கிறார் என்கிற செய்திகள் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் பேட்ட படத்தில் அது குறித்து பேச வாய்ப்பு இருக்கலாம் எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் இந்த செய்திகள் குறித்த தகவல் படக்குழுவால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி  இருந்தாலும்  ரஜினி ரசிகர்களுக்கு  ஏற்றதுபோல் விருந்தாக  பேட்ட படம் இருக்கும்.

About அகமுகிலன்

x

Check Also

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 3-வது முறையாக நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ...

%d bloggers like this: