Home / உள்நாட்டு செய்திகள் / சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது : முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச !

சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது : முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச !

சிறிலங்கா சிறிய நாடு. நாங்கள் நாட்டை பிரித்து சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது. அதற்கான சாத்தியம் முற்றாக இல்லை” எனத் தெரிவித்திருக்கும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச தொலைக்காட்சிக்கு அளித்திருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு கேட்கவில்லை.

அரசியல்வாதிகள் தான் அதனைக் கோருகிறார்கள். தமிழ் மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்தியைத் தான் கேட்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேசத் தயாராக இருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தமக்கு சிறந்த தீர்வை வழங்குவார் என அவர்கள் கருதினர்” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

About Tharshi

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: