Home / இந்திய செய்திகள் / சபரிமலையை சுற்றிய பகுதியில் 144 தடை உத்தரவு

சபரிமலையை சுற்றிய பகுதியில் 144 தடை உத்தரவு

சபரிமலை:

வரும் 5ம் தேதி சபரிமலை நடை திறப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் சபரிமலையை சுற்றிய பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் பிறப்பையொட்டி நடை திறக்கப்பட்ட போது பெண்கள் சிலர் சபரிமைலக்கு நுழைய முயற்சித்தனர். இருப்பினும் கேரள பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கேரள அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த அடம் பிடித்து வருகிறது. சபரிமலைக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது போலீசாரின் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சித்திரை அவிட்ட திருநாள் மகாராஜா

இந்நிலையில் வரும் 6ம் தேதி ( செவ்வாய்கிழமை) சித்திரை அவிட்ட திருநாள் மகாராஜா ஜென்ம தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்கென வரும் 5ம் தேதி ( திங்கட்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. ஏதும் பிரச்சனை எழாமல் இருக்க சபரிமலையை சுற்றிலும் போலீசார் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இன்று முதல் இப்பகுதியில் 144 தடை உத்தரவை பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். சபரிமலையில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கபடவுள்ளதாகவும் தெரிகிறது.

 

About இனியவன்

x

Check Also

பாரதிராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!!

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக, இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் ...

%d bloggers like this: