Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு நபர்களை (06) கைது செய்துள்ளனர்.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம், புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது,  இந்த 06 சந்தேக நபர்களும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 51 வயதுடைய வெலிஒய,கொத்தன்தீவு மற்றும் கோகிலாய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  ஒரு படகு, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் அங்கீகரிக்கப்படாத ஒரு மீன்பிடி வலையும் கடற்படை கைப்பற்றியுள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபர்கள் மீன்பிடி படகு, வெளிப்புற மோட்டார், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி மீன்வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் 2019 அக்டோபர் 20 ஆம் திகதி புல்மூடை மற்றும் பொடுவகட்டு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 நபர்களை கைது செய்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: