Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒன்பது பேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒன்பது பேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஒன்பது பேர் கிழக்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.

திருகோணமலையை அண்டிய கடற்பகுதியில் நேற்று கிழக்கு கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைளின் போது தடைச் செய்யப்பட்டுள்ள வலைகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கின்னியாப் பகுதியைச் சேர்ந்த 19 – 44 வயதிற்கிடைப்பட்ட 9 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து டிங்கி படகு வெளியில் போடும் இயந்திரமொன்று மற்றும் 305 மீட்டர் நீளமான தடை செய்யப்பட்டுள்ள வலையும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதுர் மீன்வள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: