Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது!!

கடற்படையினரால் திருகோணமலை, மலெய்முன்டால கடல் பகுதியில் 08 ஆம் திகதி வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த 07 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஈச்லம்பத்து பகுதியில் வசிக்கின்ற 18 மற்றும் 27 வயது இடையில் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை கைப்பற்றப்பட்டன.

கைது செய்துள்ள நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: