Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – நோர்வே தீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்டிருந்த கண்காணிப்பு பணியின் போது நேற்றைய தினம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 படகுகளும் தடை செய்யப்பட்ட இரண்டு வலைகளும் அதன்போது கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனுடன் இன்றைய தினம் திருகோணமலை – வலல்தோட்டம் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: