Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற மூன்று பேர் கைது!!

சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற மூன்று பேர் கைது!!

ஹம்பாந்தோட்ட துறைமுக வளாகத்தில் ஜூலை 08 ஆம் திகதி சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற 03 பேரை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் மற்றும் ஹம்பன்டோட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது லொறி வண்டி மூலம் கடத்தி சென்ற 1500 கிலோ கிராம் இரும்பை கைப்பற்றியுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அம்பலாண்டோட்ட மற்றும் ஹம்பன்டோட்ட பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், இரும்புப் பொதி மற்றும் லொறியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: