Home / உள்நாட்டு செய்திகள் / க.பொ.த சாதாரன மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!!

க.பொ.த சாதாரன மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை!!

க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அடை்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளதாகவும், மேலும் இந்த விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு திணைக்களம் பாடசாலை அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: