Home / உலகச் செய்திகள் / கோலாகலமாக தொடங்கிய ‘திங்யான்’ எனும் தண்ணீர் திருவிழா!!

கோலாகலமாக தொடங்கிய ‘திங்யான்’ எனும் தண்ணீர் திருவிழா!!

மியான்மரில் ஆண்டுதோறும் நடைபெறும் திங்யான் எனும் தண்ணீர் திருவிழா, மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பர்மிய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த விழா, பர்மிய காலண்டரில் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

அந்த வகையில் மிகவும் உற்சாகமாக தொடங்கிய இந்த விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர்.

மேலும் பாரம்பர்ய உடைகளை அணிந்த பெண்கள், நடனங்களை ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவானது, ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் அரசருக்கு கார்ட்டர் விருது!!

இங்கிலாந்தில், கார்ட்டர் விருது வழங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பிரிட்டனின் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இங்கிலாந்தின் மிக உயரிய விருதான ...

%d bloggers like this: