Home / விளையாட்டுச் செய்திகள் / கோப்பை மட்டும்தான் மும்பையிடம்; டிரெண்டிங்கில் சிஎஸ்கேதான் முதலிடம்

கோப்பை மட்டும்தான் மும்பையிடம்; டிரெண்டிங்கில் சிஎஸ்கேதான் முதலிடம்

ஐபிஎல் 2019 வது சீசனில் ட்விட்டரில் அதிகமாக டிரெண்டான அணிகள் பட்டியல் மற்றும் வீரர்களின் பெயரை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தன. இதில் இறுதிப் போட்டியில் மும்பை அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த சீசனில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான அணிகள் மற்றும்  டிரெண்டான  தனி நபர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 27 மில்லியன் ட்வீட்கள் ஐபிஎல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட 44%  அதிகம்.

இதில் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  மும்பை, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் இடப்பெற்றுள்ளன.

வீரர்களில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் இடப்பெற்றிருக்கிறார். தோனிக்கு அடுத்து கோலி, ரோஹித் ஆகியோர் உள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎல் கோப்பை மும்பையிடம் இருக்கலாம் ஆனால் மற்றவற்றில் நாங்கள்தான் முதலிடம் என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

About இனியவன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: