Home / உள்நாட்டு செய்திகள் / கோத்தாபய ராஜபக்சவுக்கு முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து எதிரான கருத்தா?

கோத்தாபய ராஜபக்சவுக்கு முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து எதிரான கருத்தா?

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோத்தா தரப்புக்கு எதிரான கருத்தாக கூறப்படுகிறது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறை சார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 2500 துறைசார் வல்லுனர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஷங்ரிலா விடுதியில் நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உரையாற்றிய போது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரே நாட்டை ஆள வேண்டும் என்றும், வர்த்தகரோ விளையாட்டு வீரரோ ஏனைய துறைசார் வல்லுனர்களாலோ அதனை சாதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

 

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | மன்னாரில் இடம்பெற்ற வாகன விபத்து-ஒருவர் காயம்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழிவு மீன்களை ஏற்றிச் ...

%d bloggers like this: