Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை

கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை

கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இதுபற்றி கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

 

இதற்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என்று கொழும்பு மாநகர முதல்வர் கூறினார்.

 

நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீர் விநியோகக் கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படவிருக்கிறது. 600 கிலோமிற்றர் தூரத்திற்கு புதிய குழாய்கள் பொருத்தப்படவிருக்கின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கென 40 பில்லியன் ரூபாவை வழங்குகிறது என்றும் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

விசேட ரயில் சேவைகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...

%d bloggers like this: