Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ்கள் -உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!!

கொழும்பு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ்கள் -உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!!

கொழும்பு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப் பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டன.

நாடு முழுவதும் மாகாண ரீதியாக சுமார் 200 க்கும் அதிகமான நோயாளர் காவு வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் அதிகாரிகள் ,மற்றும் மாகாண பணிப்பாளர்கள் சகிதம் இந்த நிகழ்வுக்குச் சென்று வண்டிகளைப் பெற்றனர்.

அத்தோடு வடக்கு மாகாணத்துக்கு 17 நோயாளர் காவு வண்டிகள் கிடைத்தன. இவற்றில் 16 சாதாரண நோயாளர் காவு வண்டிகளும் ,ஒன்று அதி கூடிய வசதிகள் கொண்ட நோயாளர் வண்டிகளும் அடங்குகின்றன

முல்லைத்தீவு 2,மன்னார் 3,வவுனியா 1,கிளிநொச்சி 3,யாழ்ப்பாணத்துக்கு 8 வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வழங்கப்பட்ட தினத்தில் இருந்து வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அதனை கையளிக்கும் நிகழ்வு கைதடி முதலமைச்சர் அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,மருத்துவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: