Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்தை சுற்றிவளைத்துள்ள பணியாளர்கள்!

கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்தை சுற்றிவளைத்துள்ள பணியாளர்கள்!

தேசிய ரூபவாஹினியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி ரூபவாஹினி தலைவர் இனோகா சத்தியாங்கனியின் அலுவலக அறையை பணியாளர்கள் எல்லோரும் சுற்றிவளைத்துள்ளனர்.

நீண்ட காலமாக பணியாளர்கள், சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி முன்வைத்த கோரிக்கையை புறக்கணித்தமை காரணமாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தலைவரின் அலுவலக அறையை சுற்றிவளைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த கோரிக்கையை முன்வைத்த ரூபவாஹினி தொழிற்சங்க உறுப்பினர்கள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையே ஆர்ப்பாட்டத்திற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதை சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அதிக சம்பளத்தின் கீழ் ரூபவாஹினிக்கு நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரால் நிறுவனம் வங்குரோத்து ஆகியுள்ளதாக பணியாளர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர். வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி ...

%d bloggers like this: