Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பில் குவிந்து கிடக்கும் குப்பைகள் இன்று முதல் அகற்றப்படும்..!!

கொழும்பில் குவிந்து கிடக்கும் குப்பைகள் இன்று முதல் அகற்றப்படும்..!!

கொழும்பு நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை இன்று பிற்பகல் வேளையில் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு குப்பை மேட்டுக்கு கொண்டு செல்வதற்கு இன்று இரவு முதல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களில் உள்ள குப்பைகளை வெளியேற்றிய பின்னர் தான் வீதி ஓரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கொழும்பு நகரில் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் குவிந்து கிடப்பதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று பெய்த மழை காரணமாக மக்களின் சுகாராதரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

குப்பைகளை கொண்டு சென்று குவிப்பதற்கு உரிய இடம் ஒன்று இல்லாமை காரணமாக தாங்கள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்குவதாக கொழும்பு மாநகரசபையில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குப்பை பிரச்சினை தொடர்பில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிடம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இதன்போது பதில் வழங்கிய அவர் மற்றையவர்கள் மீது குறை கூறுவதை தவிர்த்து தங்களது பிரச்சினைகளை தாங்களே தீர்க்க வேண்டியது கொழும்பு மாநாகர சபையின் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகர சபை, குப்பைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட ஏனைய பணிகளுக்காக மாதமொன்றுக்கு 10 இலட்சம் ரூபாவை செலவிடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்-புகைப்படங்கள் உள்ளே

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் மாவட்டத்தில் ...

%d bloggers like this: