Home / இந்திய செய்திகள் / கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று

கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று

பொது மக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் சில தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதனை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் அஜய் பல்லா தலைமையில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்,  மத்திய ஆயுதப்படை பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை அதிகாரிகள்,  இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

தீபாவளி உட்பட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதனால் மக்களிடையே சமூக விலகல்,  முக கவசம் அணிதல் உட்பட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணர்த்தும் வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு

தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக எடுத்த செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இந்த ...