Home / உள்நாட்டு செய்திகள் / கொரோனா அச்சம் – 339 பேர் நாடு திரும்பினர்.

கொரோனா அச்சம் – 339 பேர் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 339 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 287 இலங்கையர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 47 இலங்கையர்களும் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 5 இலங்கையர்களும் இன்று (பதன்கிழமை) அதிகாலை மத்தல விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

About இனியவன்

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...