Home / உள்நாட்டு செய்திகள் / கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று!!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று!!

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (13ஆம் திகதி) இடம்பெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்தத் தடவை திருவிழா இடம்பெறவுள்ளது.

கொச்சிக்கிடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 185ஆவது ஆண்டு திருவிழா இந்தத் தடவை விமரிசையாக நடைபெற மாட்டாது என திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தத் தடவை திருவிழாவில் கொடியேற்றம், திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று (12ஆம் திகதி) மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஆராதனையில் கலந்துகொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: