Home / உள்நாட்டு செய்திகள் / கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் உயிரிழப்பு.

கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் உயிரிழப்பு.

பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென சுகயீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி இரவு இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வைத்தே அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

21 வயதான இந்த இளைஞரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டார்.

About VITHUSHA

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...