Home / உள்நாட்டு செய்திகள் / கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு RADIOTAMIZHA

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு RADIOTAMIZHA

கடந்த 8 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2 மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 12 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று (14) பிறப்பித்தது. இதற்கு அமைவாக ஒரு சந்தேக நபருக்கு தலா 2 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் பிரதான நீதவான் லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

மீண்டும் அமைதியைக் குலைக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு சாட்சியாளர்கள் ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக முறைப்பாடு இருக்கமாயின் பிணை இரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதன்போது சாட்சியம் அளித்தவர்களினால் 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளது-ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ...

%d bloggers like this: