Home / உள்நாட்டு செய்திகள் / கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் கைது!!

கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் கைது!!

பெண்ணொருவருக்கு கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் கைகள் மூலம் பாலியல் சேஷ்டைகளை செய்து புரிந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கைகளால் சைகை செய்த அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் தனது காற்சட்டையை கழற்றுவது போலவும் பாசாங்கு செய்து அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டு பெண்ணின்  வாகனத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

குறித்த பெண் இவை அனைத்தையும் தனது தொலைபேசியின் மூலம் குறித்த நபருக்கு தெரியாது காணொளி மூலம் பதிவு மேற்கொண்டதுடன், அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய நிலையில் அது வைரலாக பரவியது.

குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார், மேற்படி இளைஞனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: