Home / உள்நாட்டு செய்திகள் / கேப்பாபுலவு மக்களின் மனதை வேதனைப்படுத்திய எம்.ஏ.சுமந்திரனின்!

கேப்பாபுலவு மக்களின் மனதை வேதனைப்படுத்திய எம்.ஏ.சுமந்திரனின்!

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை மிகவும் வேதனையளிக்கின்றது என்று 709 ஆவது நாளாக போராட்டத்தில் மேற்கொண்டு வரும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

09.02.19 அன்று கேப்பாபுலவு மண்ணில் போராட்டத்தினை வழிநடத்தி வரும் அரயகலா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்..

பெப்ரவரி04 அன்று கறுப்புக்கொடி  போராட்டம் கேப்பாபுல மக்களாகவே நாங்கள் முன்னெடுத்தோம் எந்த அரசியல் பிரதிநிகளும் எங்களை தூண்டி விடவில்லை அன்று மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் தென்னிலங்கையினை சேர்ந்த சிங்கள முஸ்லீம் மக்கள் இருநூறு வரையில் கலந்துகொண்டார்கள்

எங்கள் மக்கள் பிரதிநிதிகள் எங்கள் கண்ணீரினை துடைப்பார்கள் எங்களை எங்கள் வாழ் இடத்தில் குடியேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம் ஆனால் ஊடகம் ஒன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வெளியிட்ட செய்தி எங்கள் மனத்தில் பாரிய வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் சொன்ன செய்தி கேப்பாபுலவு மக்கள் சுதந்திர தினத்தினை கரிநாளாக அரசியல் வாதிகள் சிலரின் தூண்டுதலுக்கு அமைவாகவே கவனயீர்பினை மேற்கொண்டோம் என்று சொல்லி இருந்தார் உண்மையில் நாங்கள் எந்த அரசியல் வாதிகளின் தூண்டுதல்களிலும் நாங்கள் செய்யவில்லை எங்கள் போராட்டத்தில் அவர்கள் கலந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

எங்களுக்காக உழைக்க வேண்டியவர்கள் எங்களுக்காக வாழ வேண்டியவர்கள் சுதந்திர நாள் அன்று நாங்கள் எங்கள் மண்ணின் விடுதலைக்காக  போராடியது தவறு என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அதில் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டுள்ளதாக செய்தியில் சொல்லியியுள்ளார்.

மேலும் இது உண்மையில் வேதனைக்குரிய செய்தி இந்த செய்தியினை பார்த்து கவலைப்பட்டோம் கண்ணீர்விட்டோம் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கண்ணீரினை துடைப்பார்கள் என்ற எதிர்பார்புடன் இருந்தோம் எங்கள் மனங்களில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது என்றும் கண்ணீர் மல்க  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: