Home / உள்நாட்டு செய்திகள் / கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 500 வது நாள்!

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 500 வது நாள்!

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் இன்றும் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்னால் மக்களின் போராட்டம் தொடர்கின்றது. இன்றுடன் இவர்களது போராட்டம் 500 ஆவது நாளை எட்டுகிறது.

தமது பூர்விக காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தமது 500 ஆவது நாள் பூர்த்தியை ஒட்டி நாளை (14.07.2018) காலை பத்துமணிக்கு மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நிகழ்த்தவுள்ளதோடு போராட்டத்துக்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்கின்றனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்லூர் ஆலயத்திற்கு முன் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நல்லூர் ஆலயத்தில் தீச்சட்டியெடுத்து விஷேட வழிபாடுகளும் நடத்தினர். அங்கும் கூட அவர்களுக்கு உரிமையில்லாமல் போய்விட்டது. ஆலய நிர்வாகத்தினர் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் தம்மை வழிபட அனுமதிக்காது விரட்டியதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் தெரிவித்திருந்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்-

“இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாதா? இது என்ன நியாயம்? ஐ.நாவும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கான நியாயத்தின் கதவுகளை இறுகப்பூட்டிவிட்டன. எமது நல்லூரான் கூடவா?” என்று கேட்கின்றார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

அதேபோல் தான் இன்று கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தின் 500 வது நாளை எட்டியுள்ளனர். ” தமிழ் மக்களின் வாழ்வு போராட்டம் நிறைந்த வாழ்வாகவே மாறிவிட்டது. படித்து பட்டம் பெற்றால் வேலைக்காக போராட வேண்டும், சுய உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டும், இவற்றுக்கும் மேலாக சொந்த நிலங்களில் ஒரு குடிசையைக் கட்டி குடியேறுவும் போராட வேண்டிய நிலைமையைில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்”.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: