Home / உள்நாட்டு செய்திகள் / கெசல்வத்த கசுன் எனும் நபரே இவ்வாறு கைது

கெசல்வத்த கசுன் எனும் நபரே இவ்வாறு கைது

சந்தேக நபரான கெசல்வத்த தினுகவின் உதவியாளர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கெசல்வத்த கசுன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 6 கிராம் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் லொறி ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வங்கி கணக்கின் ஊடாக 183 மில்லின் ரூபாவிற்கு அதிகமான பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, பெண் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த குடு சம்பி என்று அழைக்கப்படும் ஹெட்டி ஆராய்ச்சிகே சம்பிகா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருள் பல வருடங்களாக விற்கப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியும் இதுவரை காலமும் இப்பெண் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் குற்றம் ஒழிப்பு திட்டத்துக்கு அமைவாகவே இவ்வாறான சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

About VITHUSHA

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...