Home / உள்நாட்டு செய்திகள் / கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு…!

கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு…!

யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எதிர்வரும் ஒரு சில தினங்களில் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது செய்தி பிரிவிடம் இந்த விடயத்தை தெரிவித்தார். பல இராஜதந்திர தரப்புக்களிடமும் இது தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழ் மக்களுக்கான நலனை முன்னிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் ஆதரவு கோரியுள்ளனர்.

குறித்த இருவரும் தொலைபேசியில் தம்மைத் தொடர்புகொண்டு ஆதரவைக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என அவர்களிடம் கூறியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இதேநேரம், தனிப்பட்ட நபர் யார் என்பது முக்கியமல்ல என்றும், கொள்கைகளே முக்கியம் என்று கூறியிருந்த அவர் உரிய நேரத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: