Home / உலகச் செய்திகள் / கூகுள் (Google) நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் ஆதரவு குறைந்து வருகிறது ஆய்வறிக்கை!

கூகுள் (Google) நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் ஆதரவு குறைந்து வருகிறது ஆய்வறிக்கை!

கூகுள் (Google) நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் (Google) நிறுவனம் நடத்திய ஆய்வில், சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு குறைவாகும். எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 18 விழுக்காடு குறைவு என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 விழுக்காட்டினர் ஆதரவாக உள்ளனர்.

ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்திருப்பது நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் ...

%d bloggers like this: