Home / தொழில்நுட்ப செய்திகள் / கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ இணைய தேடுபொறி

கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ இணைய தேடுபொறி

கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

உலகம் முழுவதும், செயல் பட்டு  வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. டுவிட்டரில் சமீப ...

%d bloggers like this: