Home / தொழில்நுட்ப செய்திகள் / கூகுளின் புதிய ஓ.எஸ் இதுதான்!

கூகுளின் புதிய ஓ.எஸ் இதுதான்!

கூகுளை வழக்கத்தில் இருந்து நீக்கி, புதிய ஓ.எஸ்சை கூகுள் களமிறக்கவுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, பக்சியா(Fuchsia) என்ற புதிய ஓ.எஸ்சை கூகுள் உருவாக்கி வருகிறது. இது க்ரோம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்சிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கூகுளின் அனைத்து சாதனங்களிலும், இந்த ஓ.எஸ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளின் 100 சிறந்த வல்லுநர்கள் குழுவாக பக்சியா ஓ.எஸ்சை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வாய்ஸ் கமெண்ட் மூலம் இயங்கும் வகையில் கோர் சிஸ்டம் உருவாக்கப்படும். இந்த புதிய ஓ.எஸ் லினக்ஸ் கெர்னல் பயன்பாட்டை நிறுத்திவிடும். அதற்குப் பதிலாக ஸிர்கானைப் பயன்படுத்த வலியுறுத்தும்.

ப்ளூம்பெர்க் தகவலின்படி, பக்சியா ஓஎஸ்சில் இடம்பெற்றுள்ள சில பாதுகாப்பு அம்சங்கள் கூகுளின் விளம்பர வியாபாரத்தை பாதிக்கக்கூடும். இந்த திட்டத்திற்கு கூகுள் சி.இ.ஓ மற்றும் டிசைன் பிரிவின் துணைத் தலைவர் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் புதிய ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டது.

இருப்பினும் ஓ.எஸ்.வெளியீடு குறித்து எந்தவொரு தகவலையும் கூகுள் தெரிவிக்க மறுத்துவிட்டது. பக்சியா ஓ.எஸ் குறித்து எந்தவொரு சிறப்பு தகவல்களும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஸ்மார்ட்போன்கள் முதல் டேப்லட் வரை அனைத்துவிதமான சாதனங்களிலும் இயங்கும் என்று கூறப்படுகிறது.

 

About இனியவன்

x

Check Also

தென்கொரிய நிறுவனம் மீது பேஸ்புக் நிறுவனம் வழக்கு!!

கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் இருந்து பேஸ்புக் நிறுவனம் இன்னும் முழுமையாக மீளவில்லை. ...

%d bloggers like this: