Home / உள்நாட்டு செய்திகள் / குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!!

குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!!

லிந்துலை – பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள், குளவிகொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு களைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் காயமடைந்த 6 பேரும், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும், ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: