Home / உள்நாட்டு செய்திகள் / குளவி கூடுகளால் பரீட்சை எழுத முடியாமல் நிலத்திலிருந்து பரீட்சை எழுதிய மாணவர்கள்

குளவி கூடுகளால் பரீட்சை எழுத முடியாமல் நிலத்திலிருந்து பரீட்சை எழுதிய மாணவர்கள்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் இரண்டு பெரிய குளவி கூடுகள் காரணமாக  பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதனால் பரீட்சைக்காக தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளை விட்டு வெளியேறி நிலத்தில் இருந்து பரீட்சை எழுதிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் குளவி மற்றும் குரங்குகளின் தொல்லைகள்  மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை தொடர்பில் பாடசாலை சமூகம்  பல தரப்பினர்களிடம் எடுத்துக் கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும். இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள்  பாதிக்கப்படுவதோடு, பாடசாலையின் சொத்துக்களும் சேதம் ஏற்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: