Home / உள்நாட்டு செய்திகள் / குப்பைக்கு வைத்த தீயினால் ஏற்பட்ட விபரீதம்!!

குப்பைக்கு வைத்த தீயினால் ஏற்பட்ட விபரீதம்!!

குப்பைக்கு வைத்த தீ மரங்களுக்கு பரவியதால் சுமார் மூன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காரைநகர் சுயம்பு வீதியில் , காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள காணியில் குப்பைகளை குவித்து அதற்கு தீ மூட்டினர்.

குறித்த தீ வேகமாக எரிந்து அருகில் இருந்த பனைமரங்கள் மற்றும் ஆல மரம் என்பவற்றுக்கு பரவியது.

அதனை அடுத்து மின்சார சபைக்கு அறிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேவேளை காரைநகர் பிரதேச சபைக்கும் அறிவிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: