Home / உள்நாட்டு செய்திகள் / குப்பிளானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின்- குடும்பத்துக்கு இழப்பீடு!

குப்பிளானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின்- குடும்பத்துக்கு இழப்பீடு!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி இழப்பீடாக வழங்கப்படும் என இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்­பா­ணம், குப்­பி­ளா­னில் மின்­னல் தாக்கி இரு பெண்­கள் உட்­பட 3 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 1.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளில் இரு­வர் சகோ­த­ரர்­க­ளா­வர். ஏழாலை தெற்கு, மயி­லங்­காடு ஞான­வை­ர­வர் வீதி­யில் வசிக்­கு­ம் திரு­நா­வுக்­க­ரசு கண்­ணன் (வயது 48), அவ­ரது சகோ­த­ரி­யான திரு­மதி கந்­த­சாமி மைனா­வதி (வயது 53), அவர்­க­ளது உற­வி­ன­ரான திரு­மதி ரவிக்­கு­மார் சுதா (வயது 42) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

வடக்­கில் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நிலை கடந்த சில மாதங்­க­ளாக நில­வி­வ­ரும் நிலை­யில் நேற்று யாழ்ப்­பா­ணத்­தின் சில பகு­தி­க­ளில் மழை பெய்­தது. யாழ்ப்­பா­ணம், குப்­பி­ளான் மயி­லக்­காட்­டி­லும் நேற்று மழை பெய்­தி­ருந்­தது.

அங்­குள்ள தோட்­டம் ஒன்­றில் அந்­தச் சம­யம் 4 பேர் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­துள்­ள­னர். மழை பெய்ய ஆரம்­பித்­த­தும் அவர்­க­ளில் ஒரு­வர் உணவு எடுத்­துச் செல்­லச் சென்­று­ விட ஏனைய மூவ­ரும் அங்­குள்ள தென்னை மரத்­துக்­குக் கீழே இருந்த கொட்­டகை ஒன்­றுக்­குள் ஒதுங்கி இருந்­துள்­ள­னர்.

அப்­போது அந்­தத் தென்னை மரத்­தில் மின்­னல் தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. மரத்­தின் கீழ் கொட்­ட­கை­யில் இருந்­த­வர்­கள் மின்­னல் தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டுத் தூக்கி வீசப்­பட்­டுள்­ள­னர்.

மதிய உணவை எடுத்­துத் திரும்­பிய பெண், கொட்­ட­கை­யில் இருந்­த­வர்­கள் தூக்கி வீசப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து நிலை­கு­லைந்­துள்­ளார். அவர் சுதா­ரித்து அய­ல­வர்­க­ளுக்­குத் தெரி­வித்த பின்­னரே இந்­தச் சம்­ப­வம் ஏனை­யோ­ருக்­குத் தெரி­ய­வந்­துள்­ளது.

உட­ன­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களை அய­ல­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். எனி­னும் மூவ­ரும் முன்­னரே உயி­ர­ழந்து விட்­ட­னர் என மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

அதேவேளை, நேற்று மின்னல் தாக்கத்துக்கு உள்ளான தென்னை மரத்துக்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் கடந்த ஆண்டு மின்னல் தாக்கம் ஏற்பட்டது என்றும், அதையடுத்து அந்தத் தென்னை தறிக்கப்பட்டது என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: