Home / உலகச் செய்திகள் / குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த உயிரிழந்த சிறுமி!!

குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த உயிரிழந்த சிறுமி!!

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறுமி குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளான குருப்ரீத் கவுரும் இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியைச் சென்றடைந்தனர்.

பாலைவனத்தில் சுட்டெரிக்கும்வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர்.

அவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின் தொடர்ந்தனர்.

தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீற்றர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் நாவறண்டு துடிதுடித்து உயிரிழந்தார்.

அதற்கிடையில் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் சிறுமியின் உயிரிழப்புக்கு ஆள்கடத்தல் முகவர்கள் தான் காரணம் என குற்றஞசாட்டியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: