Home / உலகச் செய்திகள் / கிளிமாஞ்சாரோ மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு…!!

கிளிமாஞ்சாரோ மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு…!!

தான்சானியா நாட்டிலுள்ள கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்ட கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது பாராசூட் இயங்காததால் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கிவரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்குவந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.

அந்த வகையில், கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தரையிறக்கும் முயற்சியாக  தான் அணிந்திருந்த பாராசூட்டை அவர் இயக்கியுள்ளார். ஆனால் தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பிடிமானத்தை இழந்த அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: