Home / உள்நாட்டு செய்திகள் / கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!!

கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!!

விவசாய பயிர்ச்செய்கையில் ஏற்ப்படக்கூடிய பூச்சி பீடைகள் மற்றும் நோய்த்தாக்கத்தினை அடையாளம் கண்டு உடனுக்குடன் தீர்வு வழங்கும் நோக்குடன் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சி முகாம் பிரதி 2 ஆவது மற்றும் 4 ஆவது செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணி தொடக்கம் 8மணி வரை கிளிநொச்சி பொதுச் சந்தையில் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாக நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் விவசாய தொழில்நுட்ப வழிகாட்டல் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன. அத்துடன் வருகை தந்த விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி பொருட்களின் சந்தைப்படுத்தலில் ‘ கொவி பொல’ எனும் செயலி சம்பந்தமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆர்வமுள்ள விவசாயிகள் குறித்த தினங்களில் கிளிநொச்சி பொதுச்சந்தையில் இயங்கிவரும் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமில் பங்கு பற்றி தீர்வுகளையும், வேண்டிய ஆலோசணைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: