Home / விளையாட்டுச் செய்திகள் / கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம் குடும்பம் தான் எப்போதும் முக்கியம் விராட் கோஹ்லி

கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம் குடும்பம் தான் எப்போதும் முக்கியம் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தனது எதிர்கால திட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் எனக்கு  என்னுடைய  குடும்பம் தான் முக்கியம் என்றும், கிரிக்கெட் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

விராட் மேலும் அவர் கூறுகையில் எட்டு வருடம் ஆகி விட்டது ஆனால் குடும்பம் தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம் மட்டுமே ஆனால் குடும்பம் தான் எப்போதும் முக்கியம். சிலர் வாழ்க்கை முக்கியம் என நினைப்பார்கள்.

கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக இல்லை என்பார்கள். நான் அதை நம்பவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த விராட் ஓய்வுக்கு பின் பேட்டை தொடவே மாட்டேன் என்றும் கிரிக்கெட் ஆடியது போதும் என்ற முடிவுக்கு பின் தான் ஓய்வு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

 

About அகமுகிலன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: