Home / விளையாட்டுச் செய்திகள் / கிண்டல் செய்ததால் பாதியில் வெளியேறிய டேவிட் வார்னர்

கிண்டல் செய்ததால் பாதியில் வெளியேறிய டேவிட் வார்னர்

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியின்போது கிண்டல் செய்ததால் கோபம் அடைந்த டேவிட் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாதியில் வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய

புகாருக்கு ஆளான டேவிட் வார்னருக்கு ஒரு ஆண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இருப்பினும் உள்ளூரில் நடைபெறும் சிறிய போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ரான்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்காக விளையாடி வரும் டேவிட் வார்னர், சிட்னியில் நேற்று நடந்த வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்.

அவர் பேட்டிங் செய்கையில் எதிரணியில் இடம் பிடித்து இருந்த ஜேசன் ஹியூக்ஸ் (பந்து தாக்கியதில் மரணம் அடைந்த பிலிப் ஹியூக்சின் சகோதரர்) கிண்டல் செய்துள்ளார். அவர் என்ன சொன்னார் என்பது  வெளியாகவில்லை. இருப்பினும் பந்தை சேதம் செய்த விவகாரம் குறித்துதான் விமர்சித்து இருப்பார் என்று தெரிகிறது.

எதிரணி வீரரின் கேலியால் ஆத்திரம் அடைந்த டேவிட் வார்னர் 35 ரன்னில் இருந்தபோது, மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரை சக வீரர்கள் சமாதானப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் களம் திரும்பிய டேவிட் வார்னர் தொடர்ந்து பேட்டிங் செய்து 157 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். களத்தில் நடந்த சம்பவம் குறித்து டேவிட் வார்னர் உள்பட யாரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர்.

About இனியவன்

x

Check Also

224 ரன்னில் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்  தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் ...

%d bloggers like this: