Home / இந்திய செய்திகள் / காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? – உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? – உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீரில் ஸ்ரீநகர், அவந்திபுரா உள்ளிட்ட விமானப்படைத் தளங்களை குறி வைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தேவையான முனனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காஷ்மீரில் புல்வாமா உள்ளிட்ட பல பகுதிகளில் ராணுவதளங்கள்,  விமானப்படை தளம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுராவில் உள்ள விமானப்படை தளங்களில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே நெடுஞ்சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

About இனியவன்

x

Check Also

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...

%d bloggers like this: