Home / ஆரோக்கியம் / காலை எழுந்தவுடன் தண்ணிர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மையா..

காலை எழுந்தவுடன் தண்ணிர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மையா..

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலிற்கு நன்மை தான். எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். நீர்சத்து குறைவாக இருப்பதால் தான் தலைவலி அதிகமாக வரும்.

அவ்வாறு அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் காலை எழுந்தவுடன் தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும். குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது.

இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். தண்ணீரை சுட வைத்து குடிப்பதால் உடலில் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும். மேலும், எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

About இனியவன்

x

Check Also

பல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை

பற்சொத்தை ஒரு சாதாரணமான விஷயம் கிடையாது. இதனால் ஏற்படும் வலி உங்கள் நாள்களை மிகவும் கஷ்டமாக்கி விடும். நீங்கள் பல் ...

%d bloggers like this: