Home / உலகச் செய்திகள் / காதை வெட்டி பணம் கேட்டு நடந்த கடத்தல் நாடகம்

காதை வெட்டி பணம் கேட்டு நடந்த கடத்தல் நாடகம்

கடத்தல்காரர்கள் இருவர் இளைஞன் ஒருவனை கடத்தி அவனிடம் €50,000 யூரோக்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

Nancy (Meurthe-et-Moselle) நகரில் இச்சம்பவம் கடந்த (27/08/2020) வியாழக்கிழமை இடம்பெற்றது.

Pas-de-Calais மற்றும் Guadeloupe நகரைச் சேர்ந்த இரு நபர்கள் இக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். 21 வயதுடைய இளைஞன் ஒருவனை கடத்தி அவனை தாக்கி, அவனது காதுகளில் ஒரு பகுதியையும் வெட்டி எடுத்தனர்.

கடத்தப்பட்ட இளைஞனின் சகோதரனுக்கு அழைப்பு எடுத்து, சகோதரனை விடுவிக்க €50,000 யூரோக்கள் பணம் தரும் படி கேட்டுள்ளனர்.

பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் சகோதரன் காவல்துறையினரை அழைத்துள்ளார்.

பணம் தருவதாக வாக்களித்துவிட்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்களுடன் சந்திப்பு இடம்பெற்றபோது, மறைந்திருந்த காவல்துறையினர் அதிரடியாக பாய்ந்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...