Home / உலகச் செய்திகள் / காதலனை கொன்று கொத்துக்கறி சமைத்த காதலி

காதலனை கொன்று கொத்துக்கறி சமைத்த காதலி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் கள்ள தொடர்பு இருந்தது.

ஏழு வருடமாக தொடர்ந்த இந்த கள்ளக்காதல் அலுத்து போக காதலன் மொராக்கோவுக்கு சென்று இன்னுமொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் , தனது கள்ள காதலனை வீட்டு வரவழைத்து அவனை தாக்கி கொன்று விட்டார்.

பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, கொத்துக்கறியாக்கினார். ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் மிகவும் பிரசித்தியான ’மச்பூஸ்’ என்னும் கொத்துகறி சோறாக காதலனின் மாமிசத்தை சமைத்தார்.

அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.

இதன் பின்னர் மூன்று மாதங்களாக குறித்த இளைஞனை காணவில்லை என அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சகோதரர் பொலிசில் முறைப்பாடு செய்தார்.

பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த விடயம் அப்போது தான் தெரிய வந்தது.

அதுமட்டுமன்றி மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு உணவாக போட்டுள்ளார். இந்த கொடூர பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Radio tamizha

x

Check Also

நாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா

என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ...

%d bloggers like this: