Home / உலகச் செய்திகள் / காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொப்பியை ஏலம் விடும்-வோர்ன் RADIOTAMIZHA

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொப்பியை ஏலம் விடும்-வோர்ன் RADIOTAMIZHA

அவுஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு சுழற்பந்துவீச்சு மன்னன் ஷேன் வோர்ன் தனது டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியை ஏலம் விட முன்வந்துள்ளார்.இந்தத் தொப்பியை ஏலம் விடுவதன் மூலம் 160,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களுக்குமேல் நிதி திரட்ட வோர்ன் எண்ணியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் 1992இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது முதல் இங்கிலாந்துக்கு எதிராக அதே மைதானத்தில் 2007இல் ஓய்வுபெறும் வரை விளையாடிய 145 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தத் தொப்பியை அணிந்தே ஷேன் வோர்ன் விளையாடியிருந்தார். இக் காலப்பகுதியில் 708 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வோர்ன், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்களைக் கைப்பற்றிய இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ளார்.

‘காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எல்லோரும் செயற்படுகின்றனர். நாங்களும் ஏதாவது வழியில் உதவு வெண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளோம்’ என்றார் ஷேன் வோர்ன்.அவுஸ்திரேலியாவில் பரவிய காட்டுத் தீயினால் குறைந்தது 24 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவுதற்காக நான் வெகுவாக நேசித்து அணிந்து விளையாடிய எனது டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியை ஏலம் விட தீர்மானித்துள்ளேன். தேவைகளை எதிர்நோக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது தொப்பியினால் கணிசமான தொகை நிதியைத் திரட்டக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்’ என அவர் குறிப்பிட்டார்.

திரட்டப்படும் முழுப் பணமும் அவுஸ்திரேலியாவின் செஞ்சிலுவை அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்புப் பணி நிதிக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த ஏலம் நாளைவரை தொடரவுள்ளது.அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட விற்பன்னரான டொன் பிரட்மனின் தொப்பி 2003இல் 225,000 ஸ்டேர்லிங் பவுண்ட்களுக்கு ஏலம் போயிருந்தது. டெஸ்ட் அரங்கில் அதி சிறந்ததும் நினைத்துப்பார்க்கமுடியாததுமான துடுப்பாட்ட சராசரியை (99.94) கொண்ட பிரட்மன் 2001இல் காலமானார்.

டென்னிஸ் நட்சத்திரங்களும் உதவிடென்னிஸ் நட்சத்திரங்களான மரியா ஷரபோவா, நொவாக் ஜொக்கோவிச், ஏஷ்லி பார்ட்டி ஆகியோரும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர்.மரியா ஷரபோவா 25,000 அவுஸ்திரேலியா டொலர்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க நொவாக் ஜோகோவிச்சும் அதே தொகையை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஏஷ்லி பார்ட்டி தனக்கு கிடைக்கும் முழுப் பணப்ரிசையும் நிவராண உதவிக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஹிஜாப் அணியத் தவறியதால் சொந்த நாட்டுக்கு அஞ்சும்-ஷோஹ்ரெஹ் பயாத் RADIOTAMIZHA

மகளிர் உலக சதுரங்க (செஸ்) போட்டியானது ஈரானின் 32 வயதுடைய ஷோஹ்ரெஹ் பயாத்துக்கு வாழ்நாள் சாதனைக்குரிய நிகழ்வாக அமைந்தது. அப் ...

%d bloggers like this: