Home / இந்திய செய்திகள் / காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருட சேவை உற்சவத்தையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இக்கோவிலின் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என முழக்கமிட்டனர்.

101 பஜனை கோஷ்டிகள் பின்தொடர, வேத மந்திரங்கள் ஒலிக்க, பெருமாள் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வருகிற திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்க ...

%d bloggers like this: