Home / உள்நாட்டு செய்திகள் / கல்விச் சுற்றுலா வந்த பேருந்து விபத்து! 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

கல்விச் சுற்றுலா வந்த பேருந்து விபத்து! 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி – மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்து கடுகண்ணாவில் இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: