Home / இந்திய செய்திகள் / கலைஞரின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!!

கலைஞரின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!!

கலைஞரின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்தார்.

மக்களவை உறுப்பினர் கனிமொழியும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் மு.கஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள் என்று கூறியுள்ள அவர், கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை தாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள் என்று கூறியுள்ளார்.

இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளில் அவரை அன்புடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார். சிறந்த அரசியல் மேதையும் உயரிய தலைவருமான அவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...

%d bloggers like this: