Home / உள்நாட்டு செய்திகள் / கலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வாரம் பிரகடனம்

கலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வாரம் பிரகடனம்

கலால்வரித் திணைக்களத்தின் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்வதற்கான விசேட வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (15ஆம் திகதி) முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள 58 கலால்வரித் திணைக்கள அலுவலங்களில் கடமைபுரியும் 1000க்கும் அதிகமான அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் பிரதேசத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கும் கலால்வரித் திணைக்களம் தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

011 2192192 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: